Sunday, September 8, 2013

மாமன்னர் ராஜ ராஜன் அவர்களின் பள்ளிப்படை தான் என்று அடித்துக் கூற ஆதாரங்கள் இல்லை என்றாலும், இதுவாகத்தான் இருக்கும் என்பதற்கான 90% சாத்தியக்கூறுகள் உள்ளன.


மாமன்னர் ராஜ ராஜன் அவர்களின் பள்ளிப்படை தான் என்று அடித்துக் கூற ஆதாரங்கள் இல்லை என்றாலும், இதுவாகத்தான் இருக்கும் என்பதற்கான 90% சாத்தியக்கூறுகள் உள்ளன. சோழர்கள் தஞ்சையில் அரசாண்டாலும் அவர்களின் அரண்மனை கும்பகோணத்தை அடுத்து பழையாறையில் தான் இருந்தது, அதோடு ராஜ ராஜனின் மனைவி "பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படையும் இதன் அருகில் இருக்கும் பட்டீஸ்வரத்தில் தான் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த மண்டபம் இடிந்து கிடந்த போது, இங்கு இருந்த தூண் ஒன்றை இதன் அருகில் இருக்கும் "பால் குளத்தம்மன்" கோயிலில் கொண்டு சென்று வைத்து விட்டனர். அந்த தூணில் "ஸ்ரீஇராஜராஜதேவரான ஸ்ரீசிவபாதசேகரதேவர் திருமாளிகையின் முன்பிருந்த பெரிய திருமண்டபம்" என்ற வாசகம் கொண்ட கல்வெட்டு இடம்பெற்றுள்ளது. இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும் போது இது அவரின் நினைவு மண்டப தூண் தான் என்பதை உறுதியாக கூறலாம் என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள். இங்கு தொல்லியல் துறை முழுவீச்சில் அகழ்வாராய்ச்சி செய்தால் இன்னும் பல சரித்திர சான்றுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. @சசிதரன