Friday, February 14, 2014

ஆண்ட பரம்பரையின் வரலாற்று சுவடுகளை நினைவு கூர்ந்து விழா எடுப்போம்

ஆண்ட பரம்பரையின் வரலாற்று சுவடுகளை நினைவு கூர்ந்து விழா எடுப்போம்

1.ருத்ர வன்னியர் அவதரித்த நாள்:பங்குனி உத்திர நட்சத்திரம்
2.இலங்கை பண்டார வன்னியர் நாள்:ஆகஸ்டு 15
3.திருவண்ணாமலை கோயில் கட்டிய வள்ளலா ராசன் வன்னியர் நாள் :மாசி மகம்
4.கல்லணை கட்டிய கரிகால்சோழ வன்னியர் நாள் :ஆடிபெருக்கு
5.தஞ்சை பெரிய கோயிலை கட்டிய அருண்மொழி வன்னியர் நாள்:மாசி மகாசிவராத்திரி
6.குலசேகர ஆழ்வார் வன்னியர் நாள்:மாசி புனர்பூச நட்சத்திரம்
7கங்கைகொண்ட சோழபுரத்தை உருவாக்கிய வன்னியர் நாள்:ஐப்பசி பௌர்ணமி திதி
8.சிதம்பரம் நடராஜர் கோவிலை உருவாக்கிய வன்னியர் நாள்:ஆருத்ரா தரிசனம் மார்கழி
9.திருப்பதி கோயிலை கட்டிய கருணாகர தொண்டைமான்
வன்னியர் நாள்: புரட்டாசி முதல் சனிகிழமை
10திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலை கட்டிய வன்னியர் நாள்:மார்கழி வைகுண்ட ஏகாதசி
11.பல்லவ மன்னன் போதிதர்மர் வன்னியர் நாள்:சித்திரை பௌர்ணமி
12.கம்பர் வன்னிய காவியத்தை அர்பணித்த
(சிலை70 என்ற காவியம்)வன்னியர் நாள் விஜயதசமி
13.சென்னப்ப நாயக்கர் வன்னியர் நாள்(சென்னை நகர்) ஆகஸ்டு 22,1639
14.செவாலியே செல்லன் நாயக்கர் நாள் ஆகஸ்டு 12,1965
15ராமசாமி படையச்சியார் வன்னியர் நாள் செப்டெம்பர் 16
16.வன்னியர் இட ஒதுக்கீடு உயிர் நீத்த போராளிகள் நாள் செப்டெம்பர் 17
17. முன்னால்இந்திய பிரதமர் வி.பி சிங் சத்திரியர் நாள்:நவம்பர் 27,(2008)
18. விழுப்புரம் கோவிந்தசாமி வன்னியர் நாள்:(முன்னால் அமைச்சர்)மே 18,(1969)
19. மாவீரர் சந்தனகாட்டு வீரப்பர் வன்னியர் நாள் செப்டம்பர் 18
20. வாழப்பாடி இராமமூர்த்தி வன்னியர் நாள் அக்டோபர் 27(2002)
21.மடுகரை சுப்ரய வன்னியர் நாள் அக்டோபர் 13(1994)
22. பாகூர் சுப்ரமணிய வன்னியர் நாள் (மு, அமைச்சர் )நவம்பர் 4(2008)
23. அரியாங்குப்பம் ராம்சிங் வன்னியர் நாள் (மு ச உ)பிப்ரவரி 23(2013)
24. அன்சாரி துரைசாமி வன்னியர் நாள் (மு, அமைச்சர் )ஏப்ரல் 27(1994)

வன்னிய மன்னன் வீர வல்லாளன்

வன்னிய மன்னன் வீர வல்லாளன் ஹிந்து கோவில்களை காப்பாற்ற தன் உயிர் நீத்த வரலாறும்
கோவில்களுக்கு தானம் அளிப்பதில் கர்ணனுக்கு இணையானவன் என்றும் , ஹிந்து மதத்தை காக்க பிறந்தவன் என்றும் , குழந்தை இல்லாத வீர வல்லாளனுக்கு அவன் சிவபக்தியால் அண்ணாமலையாரே குழந்தையாய் காட்சி தந்து, உன் இறப்பிற்கு பின் உனக்கு மகனாக இறுதி காரியங்கள் நானே செய்கிறேன் என்று வரம் பெற்ற வன்னிய மன்னன் வீர வல்லாளன் ஹிந்து கோவில்களை காப்பாற்ற தன் உயிர் நீத்த வரலாறு :
சுல்த்தான் படை தமிழகம் நுழைந்ததும் தமிழர்கள் அழிவின் விளிம்பில் இருந்தனர் . பல துயரங்கள் அடைந்தனர் . கோவில்கள் நிர்மூலமாக்க பட்டது . அப்போது குறிப்பாக மதுரை சுற்றியுள்ள தென் தமிழ்நாடு பாண்டியர் அழிவிற்கு பிறகு அல்லோலப்பட்டது சுல்த்தானால் . வடதமிழ்நாட்டில் மட்டும் மக்கள் வன்னிய மன்னன் சம்புவராயன் ஆட்சியில் பாதுக்காப்பாக இருந்தனர் . பலர் தென்தமிழ்நாடு விட்டு வடக்கே சம்புவராயன் பகுதிக்கு பாதுக்காப்புக்காக தஞ்சம் அடைந்த காலம் அது .
அப்போது ஹிந்து தர்மங்களை அழிக்கும் சுல்த்தானை அழிக்க திருவண்ணாமலை ஆண்ட வீர வன்னியன் திரு.வீர வல்லாள மகாராஜ கண்டர் புறப்பட்டார் .
கிபி. 1341 ஆம் ஆண்டு கண்ணனூர் குப்பம் என்னும் ஊரில் மதுரை சுல்தானுடன் போர் நிகழ்ந்தது . வீர வல்லாளனுடைய படையில் ஒன்றரை லட்சம் வீரர்கள் இருந்தனர் . மதுரை சுலத்தானுடைய படையில் ஆறாயிரம் படை வீரர்களே இருந்தனர் . தற்போதைய குப்பம் என்னும் இடத்தில் மதுரை சுலத்தான்கள் மீது படையெடுத்து வீரவல்லாளன் 6 மாத காலம் முற்றுகையிட்டுருந்தான் .இதனால் படை வீரர்களுக்கு தேவையான உணவுப் பொருள்கள் பதினான்கு நாட்கள் மட்டுமே போதுமானதாக இருந்த நிலை உருவானது .
இந்த நிலையில் முகமதிய படைவீரர்கள் சமாதானத்தை கோரினர் . அதற்க்கு உடன்பட்ட மூன்றாம் வீரவல்லாளன் குப்பம் நகரத்தின் மையப் பகுதியில் படைவீட்டை அமைத்துக்கொண்டு தங்கினான் . அப்போது வஞ்சப் போர் நிகழ்த்தி , வீரவல்லாளனை சுல்த்தான்கள் கொலை செய்தார்கள் .
தலைவன் இல்லாத படை வெட்டாது என்பது போர்நெறி . போர்முறைகளை பின்பற்றும் வீர்வல்லாளன் படை தோல்வியை தழுவியது .. எப்படி வேண்டுமானாலும் போரிடலாம் , சூழ்ச்சியாலும் போரிடலாம் என்று இருந்த சுல்த்தான் படை வீர வல்லாளனை கொன்றது .
வீரவல்லாளனை கொன்ற சுல்த்தான் படை , அவர் இறந்த உடலில் வைக்கோலைத் திணித்து மதுரையில் உள்ள தன்னுடைய அரண்மனையின் வாயிலில் தொங்கவிட்டான் . இத்தனை கோரமான காட்சியை மக்கள் கண்டதாக மதுரையின் கிழக்கு பகுதிக்கு கோரிப்பாளையம் என்ற பெயர் வந்தது .
ஆதாரம் :
மதுரா விஜயம் நூல் ... விஜயநகர பேரரசு தமிழகத்தை வெற்றி கொண்ட வரலாறு உள்ள நூல் .இந்நூலை இயற்றியவர் கங்காதேவி என்னும் விஜயநகர பேரரசின் அரசியார் .
(குறிப்பு : தெலுங்கு படை அரசி கங்காதேவி எழுதிய மதுரா விஜயம் நூல் இது .. தெலுங்கர் படையெடுப்பை கூறுவது ...
இதில் வன்னிய மன்னர்கள் வீர வல்லாளன் பற்றியும், அவர்கள் மாலிக் கபூர் நவாப் அவர்களை எதிர்த்ததையும் , சம்புவராய மன்னர்களின் நல்லாட்சியையும் தெளிவாக விளக்குகிறது ...
அஞ்சா புகலிடம் கட்டி , தென்தமிழ்நாட்டில் நவாப் ஆட்சிக்கு அஞ்சி வந்த சமணர்கள் , பொதுமக்கள் என அனைவருக்கும் பாதுகாப்பு தந்து வடதமிழகத்தில் நல்லாட்சி புரிந்தவன் ராஜ நாராயண சம்புவராயன் . )

Sunday, January 19, 2014

சுள்ளி பொறுக்க காட்டிற்குள் சென்று வழி தெரியாமல் போய்விட்ட

சுள்ளி பொறுக்க காட்டிற்குள் சென்று வழி தெரியாமல் போய்விட்ட பெண்களை பார்த்தால் "நீ ஏம்மா இங்க எல்லாம் வர? பொலிசுகாரனுங்க கண்ணுல பட்டுட போற... ஏதாவது ஆடு வளத்து பொழச்சிக்கோ" என்று கையில் இருக்கும் காசை கொடுத்து காட்டு எல்லை வரை வந்து விட்டு விட்டு போவாராம் எங்கள் குலசாமி வீரப்பன்..
வீரப்பன் அவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள்:-
1. காவிரிப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் விசாரித்து முடிவுகூறவேண்டும்.
2.வாச்சாத்தி, சின்னாம்பதி கற்பழிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆகியோருக்குநஷ்ட ஈடு தரவேண்டும்.
3. தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்கானசட்டம் இயற்ற வேண்டும்..
4. பெங்களூரில் மூடப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டும்.
5.தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு உறுதியளித்தபடி நிவாரணம் வழங்க வேண்டும்.
6.தமிழக சிறைகளில் உள்ள தமிழ் தேசிய விடுதலைப் படை,தமிழ் விடுதலைப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 5 பேரை தமிழக அரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்...
துரோகங்களாலும் சூழ்ச்சிகளாலும் மட்டுமே எங்களை வீழ்த்தினீர்கள் என்று வரலாறு காட்டுகிறது. மாவீரன் வீரப்பனாருக்கு வீர வணக்கம்..
Parthiban Dha

Saturday, January 18, 2014

ஏ..வேலாயி..வேலாயி!!

ஏ..வேலாயி..வேலாயி!!
விறகொடிக்கும் வேலாயி
நீ வீரப்பனை பார்த்ததுண்டா
அவன் வீரக்கதை கேட்டதுண்டா....
ஒனக்கொரு மகன் பொறப்பான்
அவன்கதய சொல்லிவையி.. புலியாக மாறிடுவான்
இந்த பூலோகத்த ஆண்டிடுவான்.. கண்ணான தேசத்தில காவேரி ஓரத்தில
காட்டுச்சிங்கம்பொறந்ததடி...
ஈச்சந்கொத்து மீச வச்சி
வீரத்தையே நெஞ்சில் வச்சி
வரிப்புலி வளர்ந்ததடி! மானத்துக்கு அவன் காவல்காரன்
மாரியாத்தா ஆட்டம் போடும் கோவக்காரன்டி..
ஊரகேடுக்கும் ஒரு கூட்டம் வந்தா
சோழி உருட்டி சோழி முடிக்கும்
வேட்டைகாரண்டி .. கண்ணான தேசத்தில காவேரி ஓரத்தில
காட்டுச்சிங்கம்பொறந்ததடி...
ஈச்சந்கொத்து மீச வச்சி
வீரத்தையே நெஞ்சில் வச்சி
வரிப்புலி வளர்ந்ததடி! ஏ காட்டுக்குள்ளே மறைஞ்சிருந்தும்
உலகத்துகெல்லாம்
தெரிஞ்சிருந்தான்!!
இருட்டா தெரிஞ்சிருந்தான்!!
ஆதரிக்கும் தெய்வமடி
ஆத்திரம் வந்தா மிருகமடி..
நல்ல மிருகமடி தொண்டக்குழில இருந்த சோத்த
எடுத்து வந்தவன்டி..
யாரும் நாடி வந்தா
இருந்ததெல்லாம் பங்கு வச்சவன்டி!
இவன நம்பி லட்சம் வீட்டில் ஒல கொதிச்சதடி..
கோட்ட இவன் தலைக்கு கோடி கணக்கில் வெலய வச்சதடி! காட்டயெல்லாம் கட்டிக் காத்த வீரனாருதான்..
இவன் அள்ளி தந்து சாஞ்சி போன அய்யனாருதான்!!
பெத்த தமிழ் மேலே ஒரு பாசம் வச்சவன்டி
அதுக்கு பாதகம்தான் நேர்ந்துபுட்டா வெடிய
வச்சவன்டி... கண்ணான தேசத்தில காவேரி ஓரத்தில
காட்டுச்சிங்கம்பொறந்ததடி...
ஈச்சந்கொத்து மீச வச்சி
வீரத்தையே நெஞ்சில் வச்சி
வரிப்புலி வளர்ந்ததடி!
மானத்துக்கு அவன் காவல்காரன் மாரியாத்தா ஆட்டம் போடும் கோவக்காரன்டி..
ஊரகேடுக்கும் ஒரு கூட்டம் வந்தா
சோழி உருட்டி சோழி முடிக்கும்
வேட்டைகாரண்டி ஏ..பேய் நடுங்கும்..புயல் நடுங்கும்
உள்ள வந்தா முனி நடுங்கும்..
சாமி கூட இங்க வந்த சத்தியமா கொல நடுங்கும்!!
முள்ளவேலங்காட்டுக்குள்ள 36 வருசங்களா
ஓடி ஓடி அலஞ்சப்பாதம் ..
ஓஞ்ச எடம் இந்த எடம்.. பூச்சொரியும் நந்தவனம்!.......!!!

Saturday, December 21, 2013

வரலாற்று நோக்கில் வன்னியர்

வரலாற்று நோக்கில் வன்னியர்

படையாட்சி,பள்ளி,கவுண்டர்,நாயக்கர்,சம்புவரையர்,காடவராயர்,கச்சிராயர்கள்,காலிங்கராயர்,மழவரையர்,உடையார்,சோழிங்கர், போன்ற 500 க்கும் மேற்பட்ட பட்டங்களை கொண்ட சாதியினர் இவர்கள்.
வன்னியர்களின் அடையாளமாக வன்னி மரம் கருதப்படுகிறது.(prosopis spicigera) வன்னிமரம் தல விருட்சமாக தஞ்சை பெரிய கோயிலிலும் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் கோயிலிலும் உள்ளது.

தோற்றம் பற்றிய கதை

தோற்றம் பற்றிய கதை

வன்னியர் என் சொல் "வன்மை" என்ற தமிழ் சொல்லிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.வன்மை என்ற சொல்லுக்கு 'வலிமை நிறைந்த' என்பது பொருளாகும்.வன்னியர் என்னும் சொல்லுக்கு நெருப்பிலிருந்து பிறந்தவர்கள் என்றும் வன்னி மரங்கள் அடர்ந்த பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் என்றும் இரு வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன..இவர்கள் ஆரியர் அல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களாவர்.சீர்காழி வைத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் காணப்படும் கல்வெட்டுகள் கீழ்கண்ட செய்திகளை தெரிவிக்கின்றன: புராணகாலத்தில் அசுரர்களான வாதாபி,மஹி என்பர்கள் பிரம்மனை நோக்கி தவம் செய்து சாகாவரம் பெற்று உலகையே துன்புறுத்தி,கொடுஞ்செயல்கள் செய்து வந்தனர்.அவர்களை அழிக்க வேண்டி ஜம்பு மகாமுனி ஒரு யாகம் செய்தார்.அப்போது அந்த யாககுண்ட நெருப்பிலிருந்து வாளுடன் தோன்றிய வீரனொருவன் அந்த அசுரர்களை அழித்தான்.அவனின் வழிதோன்றல்கள் வன்னியராவர்.
வன்னியர் என் சொல் "வன்மை" என்ற தமிழ் சொல்லிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.வன்மை என்ற சொல்லுக்கு 'வலிமை நிறைந்த' என்பது பொருளாகும்.வன்னியர் என்னும் சொல்லுக்கு நெருப்பிலிருந்து பிறந்தவர்கள் என்றும் வன்னி மரங்கள் அடர்ந்த பகுதிகளில் ஆட்சி செய்தவர்கள் என்றும் இரு வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன..இவர்கள் ஆரியர் அல்லாத திராவிடர் இனத்தை சேர்ந்தவர்களாவர்.சீர்காழி வைத்தீஸ்வரர் கோவில் வளாகத்தில் காணப்படும் கல்வெட்டுகள் கீழ்கண்ட செய்திகளை தெரிவிக்கின்றன: புராணகாலத்தில் அசுரர்களான வாதாபி,மஹி என்பர்கள் பிரம்மனை நோக்கி தவம் செய்து சாகாவரம் பெற்று உலகையே துன்புறுத்தி,கொடுஞ்செயல்கள் செய்து வந்தனர்.அவர்களை அழிக்க வேண்டி ஜம்பு மகாமுனி ஒரு யாகம் செய்தார்.அப்போது அந்த யாககுண்ட நெருப்பிலிருந்து வாளுடன் தோன்றிய வீரனொருவன் அந்த அசுரர்களை அழித்தான்.அவனின் வழிதோன்றல்கள் வன்னியராவர்.