Saturday, January 18, 2014

ஏ..வேலாயி..வேலாயி!!

ஏ..வேலாயி..வேலாயி!!
விறகொடிக்கும் வேலாயி
நீ வீரப்பனை பார்த்ததுண்டா
அவன் வீரக்கதை கேட்டதுண்டா....
ஒனக்கொரு மகன் பொறப்பான்
அவன்கதய சொல்லிவையி.. புலியாக மாறிடுவான்
இந்த பூலோகத்த ஆண்டிடுவான்.. கண்ணான தேசத்தில காவேரி ஓரத்தில
காட்டுச்சிங்கம்பொறந்ததடி...
ஈச்சந்கொத்து மீச வச்சி
வீரத்தையே நெஞ்சில் வச்சி
வரிப்புலி வளர்ந்ததடி! மானத்துக்கு அவன் காவல்காரன்
மாரியாத்தா ஆட்டம் போடும் கோவக்காரன்டி..
ஊரகேடுக்கும் ஒரு கூட்டம் வந்தா
சோழி உருட்டி சோழி முடிக்கும்
வேட்டைகாரண்டி .. கண்ணான தேசத்தில காவேரி ஓரத்தில
காட்டுச்சிங்கம்பொறந்ததடி...
ஈச்சந்கொத்து மீச வச்சி
வீரத்தையே நெஞ்சில் வச்சி
வரிப்புலி வளர்ந்ததடி! ஏ காட்டுக்குள்ளே மறைஞ்சிருந்தும்
உலகத்துகெல்லாம்
தெரிஞ்சிருந்தான்!!
இருட்டா தெரிஞ்சிருந்தான்!!
ஆதரிக்கும் தெய்வமடி
ஆத்திரம் வந்தா மிருகமடி..
நல்ல மிருகமடி தொண்டக்குழில இருந்த சோத்த
எடுத்து வந்தவன்டி..
யாரும் நாடி வந்தா
இருந்ததெல்லாம் பங்கு வச்சவன்டி!
இவன நம்பி லட்சம் வீட்டில் ஒல கொதிச்சதடி..
கோட்ட இவன் தலைக்கு கோடி கணக்கில் வெலய வச்சதடி! காட்டயெல்லாம் கட்டிக் காத்த வீரனாருதான்..
இவன் அள்ளி தந்து சாஞ்சி போன அய்யனாருதான்!!
பெத்த தமிழ் மேலே ஒரு பாசம் வச்சவன்டி
அதுக்கு பாதகம்தான் நேர்ந்துபுட்டா வெடிய
வச்சவன்டி... கண்ணான தேசத்தில காவேரி ஓரத்தில
காட்டுச்சிங்கம்பொறந்ததடி...
ஈச்சந்கொத்து மீச வச்சி
வீரத்தையே நெஞ்சில் வச்சி
வரிப்புலி வளர்ந்ததடி!
மானத்துக்கு அவன் காவல்காரன் மாரியாத்தா ஆட்டம் போடும் கோவக்காரன்டி..
ஊரகேடுக்கும் ஒரு கூட்டம் வந்தா
சோழி உருட்டி சோழி முடிக்கும்
வேட்டைகாரண்டி ஏ..பேய் நடுங்கும்..புயல் நடுங்கும்
உள்ள வந்தா முனி நடுங்கும்..
சாமி கூட இங்க வந்த சத்தியமா கொல நடுங்கும்!!
முள்ளவேலங்காட்டுக்குள்ள 36 வருசங்களா
ஓடி ஓடி அலஞ்சப்பாதம் ..
ஓஞ்ச எடம் இந்த எடம்.. பூச்சொரியும் நந்தவனம்!.......!!!

No comments:

Post a Comment